ECONOMY

நல்லிணக்கம், சகிப்புத் தன்மையுடன் தீபாவளியைக் கொண்டாடுவோம்- சுல்தான், துங்கு பெர்மைசூரி வாழ்த்து

4 நவம்பர் 2021, 11:24 AM
நல்லிணக்கம், சகிப்புத் தன்மையுடன் தீபாவளியைக் கொண்டாடுவோம்- சுல்தான், துங்கு பெர்மைசூரி வாழ்த்து

ஷா ஆலம், நவ 3- இவ்வாண்டு தீபாவளித் திருநாளை நல்லிணக்கத்தோடும் ஒருவரை ஒருவர் மதித்தும் சகிப்புத் தன்மையோடும் கொண்டாடும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் அவரின் துணைவியார் துங்கு பெர்மசூரி நோராஷிகின் தம்பதியர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதே வேளையில் சமூகத்தில் இன்னும் பரவி வரும் கோவிட்-19 நோய்த் தொற்றையும் கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாக கடைபிடிக்கும்படியும் அரச தம்பதியர் அறிவுறுத்தினர்.

தீபாவளியின் அடையாளமாக திகழும் தீப ஒளி நாட்டிலுள்ள பல்லின மக்களுக்கிடையே ஒற்றுமை உருவாக்குவதிலும் சவால்களை எதிர்கொள்வதிலும் சுடர் போல் பிரகாசிக்க பிரார்த்திக்றோம். தீபத்திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என்று சுல்தான் தம்பதியர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளனர்.

 

 

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.