ECONOMY

ஸ்ரீ செத்தியா தொகுதி ஏற்பாட்டில் பப்ஜி போட்டி: வெ. 2,700 வெல்ல வாய்ப்பு

1 நவம்பர் 2021, 7:21 AM
ஸ்ரீ செத்தியா தொகுதி ஏற்பாட்டில் பப்ஜி போட்டி: வெ. 2,700 வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், நவ 1- ஸ்ரீ செத்தியா சட்டமன்ற தொகுதி ஏற்பாட்டில் பப்ஜி மின்- விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 2,700 வெள்ளி மதிப்பிலான பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்பு உள்ளது.

இந்த போட்டியில் முதல் இடத்தைப் பிடிப்பவருக்கு 1,500 வெள்ளி ரொக்கமும் சுழல் கிண்ணமும் வழங்கப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடிப்பவர்களுக்கு முறையே வெ. 700 மற்றும் வெ. 500 பரிசாக வழங்கப்படும். ஸ்ரீ செத்தியா தொகுதியைச் சேர்ந்த 18 முதல் 31 வயது வரையிலானவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று தொகுதி உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

இந்தப் போட்டியில் 32 குழுக்கள் மட்டுமே பங்கேற்க முடியும் எனக் கூறிய அவர், https://bit.ly/PUBGSeriSetia என்ற அகப்பக்கம் வாயிலாக இம்மாதம் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.