ECONOMY

நிக்கோட்டின் திரவம், இனிப்பு பானங்களுக்கு கலால் வரி விதிக்க அரசாங்கம் திட்டம்

29 அக்டோபர் 2021, 6:21 PM
நிக்கோட்டின் திரவம், இனிப்பு பானங்களுக்கு கலால் வரி விதிக்க அரசாங்கம் திட்டம்

ஷா ஆலம், அக் 30- வேப் மற்றும் மின் சிகிரெட்டுகளில் பயன்படுத்தப்படும் நிக்கோட்டின் அடங்கிய திரவம் அல்லது பசை போன்ற பொருள்களுக்கு கலால் வரி விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சாக்லெட் அல்லது கொக்கோ, மால்ட், காப்பி, தேநீர் போன்ற இனிப்பு பானங்களுக்கும் கலால் வரி விதிப்பை விரிவு படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது நிதியமைச்சர் கூறினார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பொதுமக்கள் மத்தியில் அமல்படுத்தும் நோக்கில் இந்த வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துங்கு டத்தோஸ்ரீ ஜப்ருள் அப்துல் அஜிஸ் கூறினார். 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.