ECONOMY

நாளை கோல சிலாங்கூரில் வேலை வாய்ப்புச் சுற்றுப் பயணம்- 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு

29 அக்டோபர் 2021, 5:31 AM
நாளை கோல சிலாங்கூரில் வேலை வாய்ப்புச் சுற்றுப் பயணம்- 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு

ஷா ஆலம், அக் 29- கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ள வேலை வாய்ப்புச் சுற்றுப்பயண நிகழ்வில் 2,000 பேருக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

சேவை, தயாரிப்பு, மின்னியல், நிர்வாகம், வான் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 19 நிறுவனங்களின் முதலாளிகள் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு கொள்வதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத்  துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கேற்கும்படி கோல சிலாங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டரங்களைச் சேர்ந்த பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

வேலை இழந்தோர், வேலை தேடும் பட்டதாரிகள் உள்பட  அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்முள்ளோர் எனும் அகப்பக்கம் வாயிலாக முன்பதிவு கொள்ள வேண்டும் என்றார் அவர்.

அடுத்த மாதம் 27 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த வேலை வாய்ப்பு சுற்றுப்பயணத்தில் 25,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த வேலை வாய்ப்புச் சந்தைகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் வருமாறு-

30 ஆக்டோபர்- கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக மண்டபம், பண்டார் பாரு கோல சிலாங்கூர்

6 நவம்பர்- டேவான் மெர்டேக்கா, கோல குபு பாரு

13 நவம்பர் – டேவான் டிமெஸ்னி, உலு லங்காட்

20 நவம்பர் – டேவான் மெராந்தி பண்டார் பாரு சுங்கை பூலோ

27 நவம்பர்- டேவான் ஜூப்ளி பேராக், எஸ்.யு.கே. ஷா ஆலம்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.