ECONOMY

சிலாங்கூரில் அனைத்து வெள்ள நிவாரண மையங்களும் மூடப்பட்டன

27 அக்டோபர் 2021, 4:58 AM
சிலாங்கூரில் அனைத்து வெள்ள நிவாரண மையங்களும் மூடப்பட்டன

கோலாலம்பூர், அக் 27- சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திறக்கப்பட்டிருந்த அனைத்து தற்காலிக நிவாரண மையங்களும் நேற்றுடன் மூடப்பட்டன.

சிப்பாங்கில் செயல்பட்டு வந்த துயர் துடைப்பு மையம் நேற்றிரவு 10.00 மணிக்கு மூப்பட்டதைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் வெள்ள துயர் துடைப்பு பணிகள் முழுமையாக முற்றுப் பெற்றுள்ளதாக மலேசிய பொதுச் சேவைத் துறையின் சிப்பாங் மாவட்ட நடவடிக்கை பிரிவு அதிகாரி லெப்டினண்ட் கர்னல் முகமது அமின் நஸ்ரின் கசாலி கூறினார்.

இப்பகுதியில் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து 25 குடும்பங்கள் தங்கியிருந்த கம்போங் கிஞ்சிங் ஆரம்ப சமயப் பள்ளியின் நிவாரண மையம் நேற்றிரவுடன் மூடப்பட்டது என்று அவர் சொன்னார்.

கம்போங் கிஞ்சிங் சமூக மண்டபத்தில்  தங்கியிருந்த வெள்ள அகதி ஒருவருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டதைத் தொடர்ந்து அந்த மையம் இன்று காலை 8.00 மணியுடன் மூடப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.