ECONOMY

நம்பிக்கை மோசடி: வங்கி அதிகாரி கைது

26 அக்டோபர் 2021, 4:38 AM
நம்பிக்கை மோசடி: வங்கி அதிகாரி கைது

கோலாலம்பூர், அக் 25 - சுமார் 40  லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட  7 நம்பிக்கை மோசடி சம்பவங்களில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும்  வங்கி அதிகாரிகள்  ஒருவர் நேற்று காவல்  துறையால் கைது  செய்யப்பட்டார்

43 வயதுடைய அவ்வாடவர் கடந்த  21  செப்டம்பர்  மாதம் செராசில்  நடந்த காவல்தறைச்  சோதனையில் கைது செய்யப்பட்டதாகப் புக்கிட் அமான் வர்த்தக குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் டத்தோ முஹமட் கமாருடின் தெரிவித்தார்.

வாடிக்கையாளர் சேவைத் துறையில் பணிபுரியும்  அந்த  அதிகாரி வாடிக்கையாளரின்  நிரந்தர சேமிப்பு  நிதியைப்  பயன்படுத்தி    7 தங்கக்கட்டிக்களை வாங்கியதன் மூலம்  நம்பிக்கை மோசடி செய்ததாக அவர் கூறினார்.

அந்த அதிகாரி  மீது இதுவரை  ஒரு வழக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 408 ஆவது பிரிவின் கீழ் பதிவுச் செய்யப்பட்டுள்ள வேளையில் மேலும்  ஆறு வழக்குகள்  விசாரணையில் இருப்பதாக  கமாருடின் கூறினார்.

இது போன்று இன்னும் பலர் இவர் மூலமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், பாதிக்கப்பட்டோர் உடனடியாக  அருகாமையிலுள்ள காவல்  நிலையத்தில் புகார் செய்ய  வேண்டுமெனவும் அவர் ஆலோசனை கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.