ECONOMY

நேற்று வரை94.6 விழுக்காட்டு மலேசியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

25 அக்டோபர் 2021, 10:05 AM
நேற்று வரை94.6 விழுக்காட்டு மலேசியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

கோலாலம்பூர், அக் 25- நாட்டிலுள்ள பெரியவர்களில் 94.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 21 லட்சத்து 43 ஆயிரத்து 545 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று இரவு 11.59 மணி வரை இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும் 97.5 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 885 பேர் குறைந்த து ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அது தெரிவித்த து.

நாட்டில் நேற்று 124,530 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 106,261 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகவும் 9,831 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 கோடியே 90 லட்சத்து 69 ஆயிரத்து 291 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 51.6 விழுக்காட்டினர் அல்லது 89,095 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர். மேலும் 81.1 விழுக்காட்டினர் அல்லது 25 லட்சத்து 52 ஆயிரத்து 468 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

இது தவிர 8,438 பேருக்கு நேற்று ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதனுடன் சேர்த்து ஊக்கத் தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 101,590 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.