ECONOMY

உணவகங்களில் புகைப் பிடிப்போருக்கு எதிரான அமலாக்க நடவடிக்கை தீவிரம்

21 அக்டோபர் 2021, 8:40 AM
உணவகங்களில் புகைப் பிடிப்போருக்கு எதிரான அமலாக்க நடவடிக்கை தீவிரம்

கோலாலம்பூர், அக் 21- உணவகங்களில் புகைப் பிடிப்பதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடை மீதான அமலாக்க நட்டிவடிக்கையை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தும்.

2004 ஆம் ஆண்டு (2018 இல் திருத்தப்பட்டது) புகையிலை உற்பத்தி சட்டத்தின் விதிகளுக்கேற்ப இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

உணவகங்களில் புகைப் பிடிப்போருக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு நேற்று தாம் உத்தரவிட்டதாக தனது டிவிட்டர் பதிவின் வழி சொன்னார்.

உணவகங்களில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மீதான சோதனையை மேற்கொள்ளும் போது புகைப்பிடிப்போருக்கு எதிரான சோதனையையும் நடத்தும்படி நான் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளேன் என்றார் அவர்.

உணவகங்களில் புகைப்பிடிப்பதை தடுக்கும் 2018 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட 2004 ஆம் ஆண்டு புகையிலை உற்பத்தி சட்டத்தின் 11(1)(டி) பிரிவு கடந்த 2020 ஜனவரி முதல் தேதி தொடங்கி அமலுக்கு வந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.