ECONOMY

நாட்டில் 2.2 கோடி பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

20 அக்டோபர் 2021, 6:28 AM
நாட்டில் 2.2 கோடி பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், அக் 20- நாட்டில் 2 கோடியே 20 லட்சத்து 13 ஆயிரத்து 263 பேர் அல்லது 94 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 2 கோடியே 27 லட்சத்து 64 ஆயிரத்து 203 பெரியவர்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு  மணி 11.59 வரை வரை இந்த எண்ணிக்கை பதிவானதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று 134,684 பேர் தடுப்பூசியைப் பெற்றனர். அவர்களில் 118,575 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் 14,744 பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் வழி  4 கோடியே 81 லட்சத்து 81 ஆயிரத்து 111 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 689 பேர் அல்லது 33 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 24 லட்சத்து 91 ஆயிரத்து 822 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

இதுதவிர, 1,365 பேருக்கு நேற்று ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன் மூலம் 32,121 பேர் அந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.