ECONOMY

94 விழுக்காட்டு பெரியவர்களுக்கு தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டது

19 அக்டோபர் 2021, 10:58 AM
94 விழுக்காட்டு பெரியவர்களுக்கு தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டது

கோலாலம்பூர், அக் 19- நாட்டில் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 417 பேராக அல்லது 94 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

நேற்று நள்ளிரவு 11.59 மணி வரை இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.

அதே சமயம், 97.3 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 56 ஆயிரத்து 938 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

நேற்று பெரியவர்கள் மற்றும் இளையோர் உள்பட 207, 541 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.  இதன் வழி பிக் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் வழி செலுத்ப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4 கோடியே 80 லட்சத்து 46 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே நேற்று 9,139 பேருக்கு மூன்றாவது ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் ஊக்கத் தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 30,756 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 940,960 பேர் அல்லது 29.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும், 24 லட்சத்து 83 ஆயிரத்து 693 பபேர் அல்லது 78.9 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.