ECONOMY

நாளை முதல் மாநில எல்லை கடக்க அனுமதி- பிரதமர் அறிவிப்பு

10 அக்டோபர் 2021, 12:21 PM
நாளை முதல் மாநில எல்லை கடக்க அனுமதி- பிரதமர் அறிவிப்பு

ஷா ஆலம், அக் 10- நாளை முதல் மாநில எல்லைகளை பொதுமக்கள் கடப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும்.

நாட்டில் தடுப்பூசி பெற்ற பெரியவர்களின் எண்ணிக்கை 90 விழுக்காட்டை அடைந்து விட்டது என்ற சுகாதார அமைச்சின் அறிவிப்பின் அடிப்படையில் இந்த தளர்வு வழங்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள இந்த தரவுகளை கருத்தில் கொண்டு நாளை அக்டோபர் 11 ஆம் தேதி முதல் மாநில எல்லைகளை பொதுமக்கள் கடப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது என்றார் அவர்.

மாநில எல்லைகளைக் கடப்பதற்கு போலீசாரின் அனுமதியை இனி பெறவேண்டியதில்லை எனக் கூறிய அவர், எனினும், அவர்கள் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.