ECONOMY

தடுப்பூசி- இன்னும் நான்கு  விழுக்காட்டை எட்டினால் மாநில எல்லை கடக்க அனுமதி

2 அக்டோபர் 2021, 10:31 AM
தடுப்பூசி- இன்னும் நான்கு  விழுக்காட்டை எட்டினால் மாநில எல்லை கடக்க அனுமதி

கோலாலம்பூர், அக் 2- நாட்டில்  90 விழுக்காட்டு பெரியவர்கள் கோவிட்-10 தடுப்பூசியைப் பெறும் இலக்கை விரைவில் அடைவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இரவு வரை 86 விழுக்காட்டு பெரியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தனது டிவிட்டர் பதிவில் கூறினார்.

இதன் வழி மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். ஒன்று கூடல் நிகழ்வுகளும் அதிகளவில் நடைபெறும். நமது செயல்களுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். நோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக சோதனை செய்து கொள்ளுங்கள். நோய்த் தொற்று இருந்தால் உங்களைத்  தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள 90 விழுக்காட்டு மலேசியர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெறும் பட்சத்தில் மாநில எல்லைகளைக் கடப்பதற்கு பொது மக்கள் அனுமதிக்கப்படுவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருந்தார்.

 

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.