ECONOMY

சிப்பாங்கில்  டிங்கி நோய்த் தொற்று 80 விழுக்காடு குறைந்தது

1 அக்டோபர் 2021, 8:51 AM
சிப்பாங்கில்  டிங்கி நோய்த் தொற்று 80 விழுக்காடு குறைந்தது

ஷா ஆலம், அக் 1- சிப்பாங் மாவட்டம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை 26 ஆம் தேதி வரை 299 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தை விட இது 86.3 விழுக்காடு குறைவாகும்.

கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் 2,179 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சிப்பாங் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.

38 வது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கையில் மிக்பெரிய வேறுபாடு காணப்படுகிறது. கடந்தாண்டு இதே 38வது வாரத்தில் 1,880 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

இவ்வாண்டின் 34  முதல் 38 வது வாரம் வரையிலான காலக்கட்டத்தில் நோய்த் தொற்று பரவல் சீராக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நோய்த் தொற்று குறைந்த போதிலும் பொதுமக்கள் எப்போதும் சுத்தத்தை பேணி வர வேண்டும் என்பதோடு வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்காமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 

 

 

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.