ஷா ஆலம், செப் 4- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 19,057 ஆக ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 19,378 ஆக இருந்தது.
சிலாங்கூரில் நோய் கண்டவர்கள் எண்ணிக்கை 3,775 ஆக இருந்த தை சுகாதார அமைச்சு வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் சரவாவில் 2,723 பேரும் சபாவில் 2,279 பேரும் ஜொகூரில் 2,077 பேரும் இந்நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்களை பதிவு செய்த மாநிலங்களில் பினாங்கு (1,558), பேராக் (1,450), கிளந்தான் (1,434), கெடா (1,329) ஆகியவை உள்ளன.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-
திரங்கானு (605), பகாங் (410), மலாக்கா (338), நெகிரி செம்பிலான் (242), பெர்லிஸ் (99), புத்ரா ஜெயா (18), லபுவான் (9).








