ECONOMY

நீர் விநியோகத் தடை திங்களன்று முழுமையாக சீரடையும்

4 செப்டெம்பர் 2021, 9:25 AM
நீர் விநியோகத் தடை திங்களன்று முழுமையாக சீரடையும்

ஷா ஆலம், செப் 4- நீரில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்பட்டதால் ஏற்பட்ட நீர் விநியோகத் தடை வரும் திங்களன்று முழுமையாக வழக்க  நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மீண்டும் செயல்படத் தொடங்கி விட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் எலினா பாஸ்ரி அறிக்கை ஒன்றில் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று மாலை 6.00 மணி முதல் நீர் விநியோகம் கட்டங்க கட்டமாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களுக்கு நீர் விநியோகம் செய்யும் பணியில் 94 லோரிகள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பை பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள நிலையில் நீரின் முக்கியத்துவதை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் உணர்ந்துள்ளது. இந்த நீர் விநியோகத் தடையினால் ஏற்பட்ட பாதிப்பை முடிந்த அளவு குறைப்பதற்கு நாங்கள் பாடுபட்டு வருகிறோம் என் அவர் மேலும் சொன்னார்.

இந்த நீர் விநியோகத் தடையினால் நான்கு மாவட்டங்களில் உள்ள 463 இடங்களில் நீர் விநியோகத்  தடை ஏற்பட்டது. பெட்டாலிங், புத்ரா ஜெயா, உலு லங்காட், கோல லங்காட் ஆகியவையே பாதிக்கப்பட்ட இடங்களாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.