ஷா ஆலம், செப் 21- நிலச்சரிவு காரணமாக உலுயாம் லாமா - உலுயாம் பாரு சாலை வாகனப் போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டது.கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த நிலச்சரிவைத் தொடர்ந்து அச்சாலையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவதாக பத்தாங்காலி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி கூறினார்.
கடந்த சனிக்கிழமை பெய்த அடைமழை காரணமாக உலு கிளாங் ஆற்றில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு ஆற்றின் கரைகளில் மண்சரிவு உண்டானது. இதனால் ஆற்றையொட்டி அமைந்திருக்கும் சாலையும் பாதிக்கப்பட்டது. விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க பொதுப் பொதுப்பணித்துறை சாலையை தற்காலிகமாக மூடியுள்ளது என்றார் அவர்.
பொதுமக்கள் மாற்று வழியாக அந்தாரா காப்பி- பத்தாங் காலி சாலையை பயன்படுத்தும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட சாலையை சீரமைப்பதற்கு இரண்டு மாதங்கள் வரை பிடிக்கும் என எதிர் பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ALAM SEKITAR & CUACA
நிலச்சரிவு: உலுயாம் லாமா-உலுயாம் பாரு சாலை தற்காலிகமாக மூடப்பட்டது
21 செப்டெம்பர் 2021, 6:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
29 ஜூலை 2025

alam-sekitar & cuaca
'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் வீதிகளில் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்கள்! ஙா கோர் மிங்
n.pakiya
28 ஜூலை 2025

national
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
22 ஜூலை 2025

alam sekitar & cuaca
காட்டு தீ விபத்திற்கு மனித நடவடிக்கைகளே காரணம்
n.pakiya
21 ஜூலை 2025

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



