ECONOMY

வீட்டுப் பணிப்பெண்கள் உள்பட அந்நியத் தொழிலாளர்களுக்கு டிச. 31 வரை அனுமதி இல்லை

20 செப்டெம்பர் 2021, 6:10 AM
வீட்டுப் பணிப்பெண்கள் உள்பட அந்நியத் தொழிலாளர்களுக்கு டிச. 31 வரை அனுமதி இல்லை

புத்ரா ஜெயா, செப் 21- அந்நிய வீட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு தருவிப்பது தொடர்பில் முதலாளிகளுக்கு தவறான தகவல்களை தரக்கூடிய அறிக்கைகள் அல்லது விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என்று தனியார் ஆள்பல நிறுவனங்கள் அறிவுறுப்பட்டுள்ளன.

வீட்டுப் பணிப் பெண்கள் என்றாலே அவர்கள் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் பொதுவாக அறிந்த ஒன்று எனக் குறிப்பிட்ட மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், கடந்த 2016 மே 30 ஆம் தேதியுடன் காலாவதியான அந்நாட்டு பணிப் பெண்களை தருவிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக சொன்னார்.

இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை நாட்டில் 92,481 அந்நிய வீட்டுப் பணிப்பெண்கள் உள்ளதாகவும் அவர்களில் 64,181 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக கடந்தாண்டு  மார்ச் 20 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது முதல் அனுமதிக்கப்பட்ட எந்த நாட்டிலிருந்தும் வீட்டுப் பணிப் பெண்கள் உள்பட அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அனுமதிக்கப்படுவதில்லை முதலாளிகளுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன் என்றார் அவர்.

இதன் அடிப்படையில்,  இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை அந்நியத் தொழிலாளர்கள் நாட்டுக்கு வர தடை விதிப்பது என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்று அமைச்சர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பான எந்த முடிவும் தேசிய பாதுகாப்பு மன்றம், மனித வள அமைச்சு, உள்துறை அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகிய தரப்பினருடன் கலந்தாலோசித்தப் பின்னரே எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.