ஷா ஆலம், செப் 17- விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தவிர்க்க பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும்படி உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.உணவு மற்றும் பொருள் விநியோகத் துறையில் ஈடுபட்டவர்கள் காப்புறுதி பாதுகாப்பை ஏற்படுத்தித் தரும் முதலாளிகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விபத்துகள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஆகவே, மோட்டார் சைக்கிளோட்டிகள் பயணத்தின் போது மிகுந்த கவனப்போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றார் அவர்.
சாலை பாதுகாப்பு மட்டுமின்றி நமது உடலாரோக்கியமும் மிக முக்கியமாகும். ஆகவே உரிய காப்புறுதி பாதுகாப்பை ஏற்படுத்தித் தருவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவு பட்டுவாடா தொழிலை ஈடுபட்டவர்களுக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதோடு அவர்களை பாதுகாக்கக்கூடிய நெறிமுறைகளையும் அது வகுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ECONOMY
பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவீர்! உணவு விநியோகிப்பாளர்களுக்கு அறிவுறுத்து
17 செப்டெம்பர் 2021, 8:29 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




