ECONOMY

வாகன நிறுத்துமிட அபராதத்திற்கு 80 விழுக்காடு கழிவு- எம்.பி.கே.எல். அறிவிப்பு

8 செப்டெம்பர் 2021, 5:14 AM
வாகன நிறுத்துமிட அபராதத்திற்கு 80 விழுக்காடு கழிவு- எம்.பி.கே.எல். அறிவிப்பு

ஷா ஆலம், செப் 8- கார் நிறுத்துமிட கட்டணம் செலுத்தாதது தொடர்பில் விதிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு 80 விழுக்காடு வரையிலான கழிவை கோல லங்காட் நகராண்மைக் கழகம் வழங்குகிறது.

இந்த சலுகை நாளை தொடங்கி ஓராண்டிற்கு அமலில் இருக்கும் என்று கோல லங்காட் நகராண்மைக் கழகம் முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

கார் நிறுத்துமிட குற்றங்களுக்காக நகராண்மைக்கழக பகுதியில் விதிக்கப்பட்ட அபராதக் கட்டணத்திற்கு நாளை வியாழக்கிழமை தொடங்கி அடுத்தாண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 80 விழுக்காடு வரை கழிவு வழங்கப்படும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

இந்த ஊராட்சி மன்றம் நகராண்மைக் கழகமாக அந்தஸ்து  பெற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி  இந்த சலுகை வழங்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.

பொதுமக்கள்  குற்றப்பதிவுகள் தொடர்பான தகவல்களை இணையம் வாயிலாகவும் ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் செயலி வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

அபராதத் தொகையை நேடியாகவும் இணையம் வாயிலாகவும் செலுத்த முடியும். மேல் விபரங்களுக்கு 03-31811809  என்ற எண்களில் தொடர் கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.