ECONOMY

மந்திரி புசார் அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியாக குணராஜ் நியமனம்

30 ஆகஸ்ட் 2021, 10:48 AM
மந்திரி புசார் அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியாக குணராஜ் நியமனம்

ஷா ஆலம், ஆக 30- சிலாங்கூர் மந்திரி டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பதவி நியமனக் கடிதத்தை அவர் மந்திரி புசாரிடமிருந்து இன்று பெற்றுக் கொண்டார்.

இந்திய சமூகம் உள்பட மாநில மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை மந்திரி கவனத்திற்கு நேரடியாக கொண்டுச் சென்று உரிய தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பினை  டாக்டர் குணராஜ் இந்த நியமனத்தின் வழி பெற்றுள்ளார்.

கெஅடிலான் கட்சியின் தொடக்க கால உறுப்பினரான இவர் கெஅடிலான் கட்சியின் கோத்தா ராஜா தொகுதி தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தொகுதி கெஅடிலான் தலைவர் என்ற முறையிலும் மக்களுக்கு ஆற்றி வரும் சேவைக்கு அங்கீகாரமாக இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.