ECONOMY

புதிய அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டார் பிரதமர்- பல பழைய முகங்களுக்கு மீண்டும் வாய்ப்பு

27 ஆகஸ்ட் 2021, 6:20 AM
புதிய அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டார் பிரதமர்- பல பழைய முகங்களுக்கு மீண்டும் வாய்ப்பு

கோலாலம்பூர், ஆக 27- பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று புதிய அமைச்சரவை பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில் முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டான்ஸ்ரீ மொகிடின் யாசின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பலர் வேறு அமைச்சுகளுக்கு மாற்றப்பட்டுள்ள வேளையில் சில புது முகங்களும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் வருமாறு-

-தற்காப்பு –(மூத்த அமைச்சர்) டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன்

-சுகாதாரம் – கைரி ஜமாலுடின் அபு பாக்கார்

-சமயம் – செனட்டர் இட்ரிஸ் அகமது

-அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சு – (மூத்த அமைச்சர்) டத்தோஸ்ரீ அஸ்மின் அலி

-நிதியமைச்சு – துங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் துங்கு அப்துல் அஜிஸ்

-பொதுப்பணி – (மூத்த அமைச்சர்) டத்தோஸ்ரீ படிலா யூசுப்

-கல்வி – (மூத்த அமைச்சர்) செனட்டர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி முகமது ஜிடின்

-உள்துறை – டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின்

-பிரதமர் துறை (பொருளாதாரம்) – டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமது

-பிரதமர் துறை (சிறப்பு விவகாரங்கள்) – டத்தோ டாக்டர் அப்துல் லத்திப் அகமது

-பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டவிவகாரம்) – டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங் ஜாபர்

பிரதமர் துறை (சபா மற்றும் சரவா விவகாரங்கள்) டத்தோஸ்ரீ பங்ளிமா டாக்டர் மெக்சிமஸ் ஓங்கிலி

-போக்குவரத்து – டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங்

-சுற்றுச்சூழல் – டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான்

-மனித வளத் துறை – டத்தோஸ்ரீ எம்.சரவணன்

-கூட்டரசு பிரதேச அமைச்சர் – டத்தோஸ்ரீ சஹிடான் காசிம்

-மகளிர்,குடும்ப மற்றும் சமூக மேம்பாடு – டத்தோஸ்ரீ ரினா ஹருண்

-உயர்கல்வி – டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி அகமது

-எரிசக்தி மற்றும் இயற்கை வளம் – டத்தோஸ்ரீ தக்கியுடன் ஹசான்

-விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை – டத்தோஸ்ரீ டாக்டர் ரோனால்டு கியாண்டே

-புறநகர் மேம்பாடு – டத்தோஸ்ரீ மஹாட்சிர் காலிட்

-வெளியுறவு - டத்தோ சைபுடின் அப்துல்லா

-உள்நாட்டு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு – டத்தோ அலெக்சாண்டர் ந ந்தா லிங்கி

-தொடர்பு மற்றும் பல்லுடகம் – டத்தோஸ்ரீ அனுவார் மூசா

-வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை டத்தோஸ்ரீ ரீஸால் மரைக்கான் நைனா மரைக்கான்

-அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் – டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா

-தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு – டான்ஸ்ரீ நோர் ஓமார்

-தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள்- டத்தோ ஜூரைடா கமாருடின்

-சுற்றுலா, கலை மற்றும் கலாசாரம் – டத்தோஸ்ரீ நான்சி சுக்ரித

-தேசிய ஒற்றுமை- டத்தோ ஹலிமா முகமது சடிக்

-இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை – டத்தோஸ்ரீ அகமது பைசால் அசுமு

 

 

 

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.