ECONOMY

கார் கழுவும் மையத்தின் உரிமையாளர்கள் பெருமூச்சு விட்டனர்- 11 துறைகளுக்கு அரசு அனுமதி

19 ஆகஸ்ட் 2021, 5:08 AM
கார் கழுவும் மையத்தின் உரிமையாளர்கள் பெருமூச்சு விட்டனர்-  11 துறைகளுக்கு அரசு அனுமதி

ஷா ஆலம், ஆக 19: கடந்த திங்கட்கிழமை பொருளாதார செயல்பாடுகளை மீண்டும் தொடங்க 11 துறைகளுக்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, கார் கழுவும் மையத்தின் உரிமையாளர்கள் பெருமூச்சு விட்டனர்.

அஹ்மத் ஹுமினி அலியாஸ், 42 வயது, இங்குள்ள ஜாலான் கெபூனில் உள்ள தனது கடை நேற்று காலை 10 மணிக்கு திறக்கத் தொடங்கியவுடன் வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்கினர் என்று கூறினார். நேற்று முழுவதும் வாடிக்கையாளர்கள் காலை முதல் மாலை வரை வாகனங்களை கழுவ வருவதை நிறுத்தவில்லை.

"ஆனால் 2 டோஸ் தடுப்பூசி பெற்ற நபர்கள் மட்டுமே வாகனங்களை கழுவுவதற்கு அனுமதிக்க முடியும் என்ற முடிவைச் செம்மைப்படுத்த நான் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

தடுப்பூசி போட இன்னும் பலர் காத்திருப்பதால், முன்னெச்சரிக்கையாக தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிலையான இயக்க நடைமுறைகளையும் (SOP) வழங்குவதாக அவர் விளக்கினார்.

கோவிட் -19 தொற்று பரவாமல் இருக்க "இதுவரை எனது கூடுதல் எஸ்ஓபி வாடிக்கையாளர்களை வாகனத்தில் உட்கார ஊக்குவிப்பது மட்டுமே’’. அப்படிப் பட்டவர்களின்  வாகனங்களின் வெளிப்புறத்தை மட்டுமே நாங்கள் கழுவுகிறோம், என்று அவர் கூறினார்.

தன்னைப் போன்ற தொழில்முனைவோரை பெரிதும் பாதித்த பொருளாதாரத் துறையை அரசாங்கம் இனி மூடாது என்று அகமது ஹுமினி நம்புகிறார். "நடமாட்ட கட்டுபாடு காலத்தில் கடையின் மூடல் வாகனத்தின் உட்புறத்தை கழுவும் பக்க வேலைகளை செய்வதன் மூலம் நான் பிழைப்புக்கு மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார்.

தேசிய மீட்புத் திட்டத்தின் கட்டம் 1, கட்டம் 2 மற்றும் 3 ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் வர்த்தக மற்றும் விநியோகத் துறையில் அனைத்து அத்தியாவசியமற்ற செயல்பாடுகளையும் மீண்டும் தொடங்குவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

அவைகளில் கார் கழுவும் கடைகள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள், நகைக் கடைகள், வீட்டு பொருட்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் கடைகள், தளபாடங்கள் கடைகள், விளையாட்டு உபகரணங்கள் கடைகள், ஆடை, ஃபேஷன் மற்றும் பாகங்கள் கடைகள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் ஆகியவை அடங்கும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.