ஷா ஆலம், ஆக 10- சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்ட நோய்த் தொற்று மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உற்பத்தி துறை சம்பந்தபட்டவை என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.மொத்த தொற்று மையங்களில் 96 அல்லது 54 விழுக்காடு தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்டவை என்பதை சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் தரவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.
மேலும் 22 தொற்று மையங்கள் அல்லது 12 விழுக்காடு சேவைத் துறை வாயிலாகவும் 9 தொற்று மையங்கள் பொது மக்கள் மத்தியிலிருந்தும் பரவின என்றார் அவர்.
விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத அணுகுமுறையை சுகாதார இலாகா மேற்கொண்டு வருவதாக அமிருடின் தெரிவித்தார்.
மருத்துவம் சார்ந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக 3,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் செர்டாங்,மேப்ஸ் விவசாய கண்காட்சி மையத்தில் உள்ள பி.கே.ஆர்.சி. தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையத்திற்கு வழங்கப்பட்டது என்றார் அவர்.
மருத்துவம் சாராத அணுகுமுறையின் கீழ் மாநிலத்தில் 27 கோவிட்-19 மதிப்பீடு மையங்களும் (சி.ஏ.சி.) ஒரு இயங்கலை மதிப்பீட்டு மையமும் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
ECONOMY
சிலாங்கூரில் பாதிக்கும் மேற்பட்ட தொற்று மையங்கள் தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்டவை
10 ஆகஸ்ட் 2021, 5:47 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
மேற்கு ஆசிய மோதல்களுக்கு இடையிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun
22 ஜூன் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



