பெட்டாலிங் ஜெயா, ஆக 7- கிளானா ஜெயா, பி.கே.என்.எஸ். காம்ப்ளக்சில் அமல் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வருகைக்கான முன்பதிவின்றி தடுப் பூசி பெறுவதற்கான வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த வாய்ப்பு இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அவர் சொன்னார்.
உடனடியாக தடுப்பூசி பெற விரும்புவோர் தடுப்பூசி மையத்திற்கு நேரில் வந்து செலங்கா செயலியில் அங்கு உள்ள குறியீட்டை பதிவிட்டால் போதுமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழுமத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக இந்த தடுப்பூசி திட்டத்தை அனைவரும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதே தடுப்பூசி மையத்தில் வரும் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை அந்நியத் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் முதலாளிகள் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
ECONOMY
செல்வேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசி பெறுங்கள்: ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை
7 ஆகஸ்ட் 2021, 8:11 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
சிறந்த பொருளாதார மையமாக உருமாறும் லங்காவி
Shalini Rajamogun
29 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



