ECONOMY

மொகிடின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்பு- உயர் கல்வியமைச்சர் பதவி விலகினார்

6 ஆகஸ்ட் 2021, 11:30 AM
மொகிடின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்பு- உயர் கல்வியமைச்சர் பதவி விலகினார்

ஷா ஆலம், ஆக 6- டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து  மேலும் ஒரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உயர்கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி அகமது அறிக்கை ஒன்றில் கூறினார்.

இந்த பதவி விலகல் உடனடியாக அமலுக்கு வருவாக அம்னோ தேசிய மகளிர் பிரிவுத் தலைவியுமான அவர் தெரிவித்தார்.

மொகிடின் யாசின் தலைமைத்துவத்திற்கான ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அமைச்சரவையிலிருந்து விலகும் இரண்டாவது அமைச்சர் நோராயின் ஆவார். அம்னோ உச்ச மன்றத்தின் அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சம்சுல் அனுவார் நசாரா கடந்த 3ஆம் தேதி பதவி விலகினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.