கோலாலம்பூர், ஆக 2- நாட்டின் கோவிட்-19 நோய்த் தொற்று வரலாற்றில் மிக அதிகமாக அதாவது 219 மரணச் சம்பவங்கள் இன்று பதிவாகின.இன்று பலியானவர்களையும் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொறறினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 9,402 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 0.82 விழுக்காட்டை இந்த மரண எண்ணிக்கை பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.
இன்று மரணமடைந்தவர்களில் 201 பேர் உள்நாட்டினர் என்றும் 18 பேர் வெளிநாட்டினர் என்றும் கூறிய அவர், நாட்டில் பதிவான அதிக எண்ணிக்கையிலான மரணச் சம்பவம் இதுவாகும் என்றார்.
இன்று 11,767 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 937, 732 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
ECONOMY
நோய்த் தொற்றுக்கு திங்கள் கிழமை 219 பேர் மரணம்: நாட்டின் கோவிட்-19 வரலாற்றில் அதிக உயிர்பலி
2 ஆகஸ்ட் 2021, 4:59 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




