ECONOMY

மெந்தாரி கோர்ட், வெஸ்ட்லைட் பி.கே.என்.எஸ். குடியிருப்பில் இன்று பி.கே.பி.டி. நீக்கம்

12 ஜூலை 2021, 10:57 AM
மெந்தாரி கோர்ட், வெஸ்ட்லைட் பி.கே.என்.எஸ். குடியிருப்பில் இன்று பி.கே.பி.டி. நீக்கம்

ஷா ஆலம், ஜூலை 12- பெட்டாலிங் ஜெயாவிலுள்ள மெந்தாரி கோட் மற்றும் வெஸ்ட்லைட் பி.கே.என்.எஸ். குடியிருப்பில் அமல்படுத்தப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) இன்று தொடங்கி அகற்றப்படுகிறது.

நிர்ணயிக்கப்பட்டதை விட இரு தினங்கள் முன்னதாக இந்த கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்படுகிறது.

தேசிய மீட்சித் திட்டம் மற்றும் பி.கே.பி.டி. தொடர்பில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.

இம்மாதம் முதல் தேதி தொடங்கி 14 நாட்களுக்கு மூன்று பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படுத்தும் தகவலை இஸ்மாயில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.

மெந்தாரி கோர்ட், சுங்கைவே எஸ்.எஸ் 91ஏ வீடமைப்பு பகுதி மற்றும் பி.கே.என்.எஸ். வெஸ்ட்லைட் அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவையே அம்மூன்று பகுதிகளாகும்.

 

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.