ECONOMY

ஸ்ரீ ஆயு குடியிருப்பு பகுதியில் தற்காலிக மினி சுகாதார மையம்

3 ஜூலை 2021, 12:30 PM
ஸ்ரீ ஆயு குடியிருப்பு பகுதியில் தற்காலிக மினி சுகாதார மையம்

ஷா ஆலம், ஜூலை 3- கடந்த புதன் கிழமை தொடங்கி கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்ட பண்டார் பாரு பாங்கி, செக்சன் 4இல் உள்ள பங்சாபுரி ஸ்ரீ ஆயுவில் தற்காலிக மினி சுகாதார கிளினிக் திறக்கப்படும்.

வட்டார மக்களுக்கு சிகிச்சை வழங்குவதை நோக்கமாக கொண்ட இந்த சுகாதார மையம் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும் என்று பெட்டாலிங் மாவட்ட அதிகாரியும் உலு லங்காட் பேரிடர் நிர்வாகக் குழுவின் தலைவருமான நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மற்றும் மருந்துகள் தரும் வசதிகளைக் கொண்ட இந்த சுகாதார மையத்தை உலு லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகம் திறந்துள்ளது என்று அவர் சொன்னார்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு வரும் நோயாளிகளை கவனிப்பதற்கு ஏதுவாக பண்டார் பாரு பாங்கியில் உள்ள சுகாதார மையம் கூடுதல் நேரம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.