NATIONAL

தொழில்நுட்பம் அறியாததால் தடுப்பூசித் திட்டத்திற்கு பதியத் தவறும் மூத்த குடிமக்கள்

18 ஜூன் 2021, 1:13 PM
தொழில்நுட்பம் அறியாததால் தடுப்பூசித் திட்டத்திற்கு பதியத் தவறும் மூத்த குடிமக்கள்

கோல சிலாங்கூர், ஜூன் 18- தொழில்நுட்பம் பற்றிய ஞானம் இல்லாத காரணத்தால் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் பதிவு செய்ய இயலாத நிலையில் உள்ளனர்.

கோவிட்-19 தடுப்பூசியை முன்னதாகவே பெறுவதற்கு அவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் நவீன தொழில்நுட்பம் பற்றிய ஆற்றல் இல்லாதது அப்பணியை மேற்கொள்வதில் அவர்களுக்கு இடையூறாக உள்ளது என்று புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாரியா ஜூல்கிப்ளி கூறினார்.

கிராமப்புறங்களில் தடுப்பூசிக்கான பதிவு இயக்கத்தை மேற்கொள்வதற்காக கிராமப்புறங்களுக்கு இன்று தாம் மேற்கொண்ட பயணத்தின் போது தடுப்பூசியைப் பெறுவதில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தை பல தம்மிடம் வெளிப்படுத்தியதாக அவர் சொன்னார்.

எனினும், விவேக தொலைபேசியை பயன்படுத்த தெரியாதது, எழுத மற்றும் படிக்க இயலாதது போன்ற காரணங்களால் அவர்களால் தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மூத்த குடிமக்கள் கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நோய்த் தொற்று அபாயத்தை அவர்கள்தான் அதிகம் எதிர்நோக்குகின்றனர் என்றார் அவர்.

ஜாஜரான் கோல சிலாங்கூர், ஜாலான் செனாங்கினில் நடமாடும் கோவிட்-19 தடுப்பூசிக்கான பதிவு இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை இலக்காக கொண்ட இந்த பதிவு இயக்கம் பாரம்பரிய கிராமங்கள், கம்போங் பாகான் மற்றும் இந்திய குடியிருப்பு பகுதிகளில் அடுத்த மூன்று வாரங்களுக்கு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.