MEDIA STATEMENT

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் புதிய டத்தோ பண்டாராக டத்தோ ஸமானி அகமது பதவியேற்றார்

15 ஜூன் 2021, 6:51 AM
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் புதிய டத்தோ பண்டாராக டத்தோ ஸமானி அகமது பதவியேற்றார்

ஷா ஆலம், ஜூன் 15- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஒன்பதாவது டத்தோ பண்டாராக டத்தோ ஸமானி அகமது மன்சோர் இன்று பதவியேற்றார். விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.வில் நடைபெற்ற நிகழ்வில் அவர் புதிய டத்தோ பண்டாராக பதவி  உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

ஐம்பது வயது ஸமானியின் நியமனம் நேற்று முதல் அமலுக்கு வருகிறது. மாநில நிதி அதிகாரியாக நியமனம் பெற்ற டத்தோ ஹரிஸ் காசிமுக்கு பதிலாக ஸாமானி இப்பொறுப்பை ஏற்கிறார்.

இந்த பதவியேற்பு சடங்கு உடல் உஷ்ணத்தைப் பரிசோதித்தல், முகக்கவசம் அணிதல், கூடல் இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட அனைத்து எஸ்.ஒ.பி. நடைமுறைகளையும் பின்பற்றி நடத்தப்பட்டது.

ஸமானி அகமது வட மலேசிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் (நிர்வாகம்) துறையில் இளங்கலை பட்டத்தையும்  மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் நிர்வாக துறையில் இளங்கலை பட்டத்தையும் இன்தான் எனப்படும் தேசிய பொது நிர்வாக கழகத்தில் அறிவியல் நிர்வாகத் துறையில் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக அவர் பல்வேறு அரசாங்கத் துறைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.