ECONOMY

பெருந்தொற்று காலத்தில் பாதி மலேசியர்கள் இணயைம் வழி பொருள்கள் வாங்குகின்றனர்- ஆய்வு கூறுகிறது

8 ஜூன் 2021, 2:24 AM
பெருந்தொற்று காலத்தில் பாதி மலேசியர்கள் இணயைம் வழி பொருள்கள் வாங்குகின்றனர்- ஆய்வு கூறுகிறது

கோலாலம்பூர், ஜூன் 8- பெருந்தொற்று காலத்தில் சுமார் 57 விழுக்காட்டு மலேசியர்கள் பொருள்களை இணையம் வழி வாங்குவது கோவிட்-19 நோய்த் தொற்று மீதான ஜூவாய் ஐகியூஐ நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.

நோய்த் தொற்றுக்கு முன்பு இருந்த தைவிட இப்போது அதிகமானோர் பொருள்களை வாங்குவதற்கு இணைய சேவையை பயன்படுத்துவதை இது காட்டுகிறது. இதன் வழி நாட்டில் இணைய வர்த்தகம் அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது.

லஸாடா மலேசியாவின் புதிய இணைய விற்பனையாளர்களின் எண்ணிக்கை 300 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக ஜூவாய் ஐகியூஐ குழுமத்தின்  தலைமை செயல்முறை அதிகாரிக காசிஃப் அன்சாரி அறிக்கை ஒன்றில் கூறினார்.

பெருந்தொற்று காலத்தில் இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படும் சில்லறை வியாபாரம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக பேங்க் நெகாரா கூறுகிறது. கடந்தாண்டைக் காட்டிலும் தற்போது அதிகமானோர் இணையம் வழி பொருள் வாங்குவதற்கு அதிகம் செலவிடுவதை எங்களின் தரவுகள் காட்டுகின்றன என்றார் அவர்.

இணையம் வழி பொருள்கள் வாங்கும் நடவடிக்கைகள் அதிகரித்த தன் வழி இதர பொருளாதார நடவடிக்கைகளும் வளர்ச்சி கண்டு ரொக்கமில்லா வணிகம் வளர்ச்சி காண்பதற்குரிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.