ECONOMY

சாலைத் தடுப்புகளில் எழு அமைச்சுகள்- மூன்று அரசு நிறுவனங்களின் கடிதங்கள் மட்டுமே ஏற்கப்படும்

7 ஜூன் 2021, 6:50 AM
சாலைத் தடுப்புகளில் எழு அமைச்சுகள்- மூன்று அரசு நிறுவனங்களின் கடிதங்கள் மட்டுமே ஏற்கப்படும்

ஷா ஆலம், ஜூன் 7- மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்தின் போது சாலைத் தடுப்புகளில் ஏழு அமைச்சுகள் மற்றும் மூன்று அரசு நிறுவனங்களின் கடிதங்களை மட்டுமே போலீசார் ஏற்றுக் கொள்வர்.

தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கும் வீடு திரும்புவதற்கும் கீழ்க்கண்ட அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களால் வழங்கப்பட்ட அனுமதி கடிதங்கள் மட்டுமே ஜூன் 8ஆம் தேதி தொடங்கி சாலைத் தடுப்புகளில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

அந்த அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்கள் வருமாறு-

- அனைத்துலக வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு

- போக்குவரத்து அமைச்சு

- விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சு

- தோட்ட மற்றும் மூலத்தொழில் அமைச்சு

- பேங்க் நெகாரா மலேசியா

- பங்குச் சந்தை ஆணையம்

- ஊராட்சி மன்றங்கள்

- தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு

- உள்துறை அமைச்சு

- போலீஸ் துறை

அனைத்து அனுமதி கடிதங்களும் ஜூன் தேதியிடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அக்ரில் சானி கூறினார் காலாவதியான கடிதங்களை வைத்திருப்போர் அல்லது சட்டவிரோதமாக  எல்லை கடக்க முயல்வோர்  தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.