ECONOMY

பொது முடக்க காலத்தில் மதுபானங்கள் மட்டுமே விற்கும் கடைகள் செயல்பட அனுமதி மறுப்பு

5 ஜூன் 2021, 3:37 AM
பொது முடக்க காலத்தில் மதுபானங்கள் மட்டுமே விற்கும் கடைகள் செயல்பட அனுமதி மறுப்பு

கோலாலம்பூர், ஜூன் 5-  முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் போது  மாநகரில் உள்ள மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்யும் கடைகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படாது.

எனினும், பலசரக்கு கடைகள், பேராங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளில் மதுபானங்கள் விற்பதற்கு அனுமதிக்கப்படுவதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிக்கை ஒன்றில் கூறியது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் உணவகங்கள் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை உணவுகளை பொட்டலங்களாக விற்பனை செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நிர்ணையிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையில் (எஸ்.ஒ.பி.) குறிப்பிடப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் மதுபான விற்பனை அனுமதிக்கப்படுகிறதா? இல்லையா? என்பதில் வியாபாரிகள் மத்தியில் குழப்பம் எற்பட்டுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் அனைத்து மதுபானத் தயாரிப்புத் தொழிற்சாலைகளையும் மூட தேசிய  பாதுகாப்பு மன்றம் உத்தரவிட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.