ஷா ஆலம், ஜூன் 5- வரும் பொதுத் தேர்தலில் கெஅடிலான் கட்சியின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பு அதிகமான மகளிருக்கு வழங்கப்படும் என்று கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா இஸ்மாயில் நம்பிகைத் தெரிவித்தார்.
சமுதாயத் தலைவர்களாக உருவெடுக்கும் ஆற்றல் மகளிருக்கும் உள்ளதால் அவர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
தமது இந்த கருத்து கட்சியில் உள்ள ஆண்களுக்கு எதிரான அல்ல எனக் கூறிய அவர், மகளிருக்கு கூடுதல் வாய்ப்பினை வழங்கும் பரிந்துரையை அரசாங்கம் பரிசீலிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
மகளில் பல விஷயங்களில் ஆண்களைக் காட்டிலும் ஆற்றல் கொண்டவர்களாகவும் ஆற்றல் அளவீட்டில் 84 விழுக்காடு கூடுதல் ஆக்கத்திறன் கொண்டவர்களாகவும் மகளிர் உள்ளதை கடந்த 2019ஆம் ஆண்டு ஹாவர்ட் பிசினஸ் ரிவியு ஏட்டின் ஆய்வு காட்டுவதாக அவர் கூறினார்.
எதிலும் அதிக முனைப்பு காட்டுவது, போட்டியிலும் ஆற்றல், சுய மேம்பாட்டில் அக்கறை கொள்வது, நேர்மை மற்றும் உயர் நெறியைக் கொண்டிருப்பது ஆகியவை மகளிரிடம் காணப்படும் கூடுதல அம்சங்களாகும் என்றார் அவர்.
நேற்று இயங்கலை வாயிலாக நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் 15வது மகளிர் மாநாட்டை இயங்கலை வாயிலாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
வரும் 15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கட்சியின் மகளிர் பிரிவினர் தங்களின் உழைப்பை இரட்டிப்பாக்கி மக்களின் ஆதரவைப் பெற முனைய வேண்டும் என்பதோடு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.








