கோலாலம்பூர், ஜூன் 1- இன்று கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 7,105 ஆக உயர்வு கண்டது. நேற்று இந்த எண்ணிக்கை 6,824 ஆக இருந்தது.
இதன் வழி நாட்டில் நோய்த் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 579,462 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சிலாங்கூரில் 2,068 பேர் இந்நோயினால் பீடிக்கப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் (817), சரவா (703), கிளந்தான் (531), ஜொகூர் (431), பினாங்கு (400), நெகிரி செம்பிலான் (397), பேராக் (387), சபா (318) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மேலும், மலாக்காவில் 249 சம்பவங்களும் கெடாவில் 236 சம்பவங்களும் திரங்கானுவில் 198 சம்பவங்களும் பகாங்கில் 190 சம்பவங்களும் லபுவானில் 162 சம்பவங்களும் புத்ரா ஜெயாவில் 18 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. பெர்லிஸ் மாநிலத்தில் யாருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை.








