ஷா ஆலம், மே 21- நாடு முழுவதும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமலாக்குவது குறித்து விவாதிப்பதற்காக இன்று கூடும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு கூட்டத்திற்கு மாநில மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அந்த கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளவிருப்பதை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதி படுத்தினார்.
"ஆகக் கடைசி நிலவரம்- தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள மந்திரி புசார்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தற்போதுதான் நான் தகவலை பெற்றேன்.
"மீண்டும் அழைத்தமைக்கு நன்றி. சிலாங்கூர் மக்களின் கருத்துகளை முன்வைப்பதற்காக இக்கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்வேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமக்கு முதலில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பின்னர் அந்த அழைப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதாக அமிருடின் நேற்று கூறியிருந்தார்.
NATIONAL
பொது முடக்கம் மீதான சிறப்பு கூட்டம்- மந்திரி புசார், முதலமைச்சர்களுக்கு மீண்டும் அழைப்பு
21 மே 2021, 2:48 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



