ANTARABANGSA

லெம்பா ஜெயா, பாண்டான் இண்டா தொகுதிகளில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை

11 மே 2021, 3:08 AM
லெம்பா ஜெயா, பாண்டான் இண்டா தொகுதிகளில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை

ஷா ஆலம், மே 11- லெம்பா ஜெயா மற்றும் பண்டான் இண்டா சட்டமன்றத் தொகுதிகளில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெறுகிறது. இந்த பரிசோதனை இயக்கத்தில் கலந்து பயன்பெறுமாறு வட்டார பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த பரிசோதனை இயக்கங்கள் லெம்பா ஜெயா மண்டபத்திலும்  பாண்டான் இண்டா எம்.பி.ஏ.ஜே. மண்டபத்திலும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் நடைபெறும் என்று எஸ்.டி.எப்.சி. எனப்படும் சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு கூறியது.

இந்த இலவச பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாகவும் http://screening.selangkah.my  எனும் அகப்பக்கத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளும்படி அக்குழு  முகநூல் வழி கேட்டுக் கொண்டது.

இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை தினசரி இரு தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை தொடங்கி இதுவரை காஜாங், செமினி, தெராத்தாய், பலாக்கோங் சுங்கை ராமால், டுசுன் துவா ஆகிய தொகுதிகளில இந்த இலவச பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.