NATIONAL

இன்று 4,498 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- ஒரே நாளில் 1,000 நேர்வுகள் அதிகரிப்பு

7 மே 2021, 10:02 AM
இன்று 4,498 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- ஒரே நாளில் 1,000 நேர்வுகள் அதிகரிப்பு

ஷா ஆலம், மே 7- இன்று 4,498 கோவிட்- 19 சம்பவங்கள் நாட்டில் பதிவாகின. நேற்றைய தினத்தைக் காட்டிலும் இன்று சுமார் 1,000 நேர்வுகள் அதிகரித்துள்ளன. நேற்று 3,551 சம்பவங்கள் மட்டும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 432,425 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சிலாங்கூரில் மிக அதிகமாக 1,424 சம்பவங்கள் பதிவான வேளையில் அதற்கு அடுத்த நிலையில் 750 சம்பவங்களுடன் சரவா மாநிலமும் 436 சம்பவங்களுடன் கோலாலம்பூரும்  உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இன்று  22 மரணச் சம்பவங்களை சுகாதார அமைச்சு பதிவு செய்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.