ECONOMY

கோல சிலாங்கூர், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வெ. 150,000 மானியம்-மந்திரி புசார் வழங்கினார்

23 ஏப்ரல் 2021, 10:06 AM
கோல சிலாங்கூர், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வெ. 150,000 மானியம்-மந்திரி புசார் வழங்கினார்

கோல சிலாங்கூர், ஏப் 23- இங்குள்ள ஜாலான் கிள்ளான், 2வது மைல் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்திற்கு சிலாங்கூர் மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 150,000 வெள்ளி மானியம் வழங்கினார்.

மாநில சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கோல சிலாங்கூர் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்த அவர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த நிதிக்கான காசோலையை ஆலயத் தலைவர் கண்ணதாசனிடம்  ஒப்படைத்தார்.

இங்குள்ள கம்போங் அப்பி அப்பி பகுதியில் இடுகாட்டிற்காக வழங்கப்பட்ட 8 ஏக்கர் நிலத்திற்கு  சாலை வசதியை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று ஆலய ஆலோசகரும் முன்னாள் கோலா சிலாங்கூர் மாவட்ட மன்ற உறுப்பினருமான திருமூர்த்தி கூறினார்.

 

 

வகைyb activities

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.