NATIONAL

மக்கள் சேவையைத் தீவிரப்படுத்துவீர்-  கெஅடிலான் உறுப்பினர்களுக்கு அமிருடின் வலியுறுத்து

5 ஏப்ரல் 2021, 3:13 AM
மக்கள் சேவையைத் தீவிரப்படுத்துவீர்-  கெஅடிலான் உறுப்பினர்களுக்கு அமிருடின் வலியுறுத்து

ஷா ஆலம், ஏப் 5- மக்கள் சேவையைத் தீவிரப்படுத்தும்படி கெஅடிலான் கட்சி உறுப்பினர்களை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கான பாடுபட்டு வரும் கெஅடிலான் கட்சி தொடர்ந்து வலுவுடன் செயல்படுவதற்கு கட்சி உறுப்பினர்களின் தீவிர சமூகப் பணி முக்கியமானதாக விளங்குவதாக சிலாங்கூர் மாநில தலைவர் மன்றத்தின் தலைவருமான அவர் கூறினார்.

கெஅடிலான் கட்சியின் 22ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன, சமய வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களின் நலனுக்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இக்கட்சி ரிமோர்மாசி இயக்கத்தை முன்னின்று நடத்தி வருகிறது.

அதே சமயம், அனைத்து சவால்களையும் கடந்து வலுவான கட்சியாக கெஅடிலான் தொடர்ந்து பீடுநடை போட்டு வருகிறது.  கெஅடிலான் உறுப்பினர்களாகிய நாம் ஒன்றுபட்டு வலுவுடன் செயல்படுவதோடு மக்களுக்கு சேவை வழங்குவதில் அதிக முனைப்புடன் செயல்படுவோம் என்று  சமூக ஊடகம் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் மாநில மந்திரி புசாருமான அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.