NATIONAL

மந்திரி புசார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இன்று தடுப்பூசி பெற்றனர்

25 பிப்ரவரி 2021, 11:31 AM
மந்திரி புசார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இன்று தடுப்பூசி பெற்றனர்

ஷா ஆலம், பிப் 25- மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இன்று கோவிட்-19 தடுப்பூசியை பெற்றனர்.

மந்திரி புசார் மற்றும் மாநில பாதுகாப்பு மன்றத்தை உறுப்பினர்கள் உள்பட 42 பேருக்கு இன்று பிற்பகல் 1.40 மணியளவில் ஷா ஆலம் மருத்துவமனையில் இந்த தடுப்பூசி போடப்பட்டது.

துணை சுகாதார அமைச்சர் 1 டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி, சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  டாக்டர் சித்தி மரியா மாமுட், மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ நோர் அஸ்மி டிரோன், மாநில சுகாதார இயக்குநர்  டத்தோ இண்டிரா டாக்டர் ஷஹாரி ஙகாடிமான் ஆகியோரும் இந்த தடுப்பூசியை இன்று பெற்றனர்.

மந்திரி புசார் இன்று மதியம் 1.25 மணியளவில் மருத்துவமனையை வந்தடைந்தார். தடுப்பூசி போடுவதற்கு  முன்னர் கடைபிடிக்க வேண்டிய ஐந்து நிபந்தனைகளில் ஒன்றான மைசெஜாத்ரா  செயலியில் பதிவு செய்யும் பணியை அவர் மேற்கொண்டார்.

பின்னர், மந்திரி புசாருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கும் சிறிது நேரம் விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் தடுப்பூசி போடுவதற்கு இணக்கம் தெரிவிக்கும் பாரத்தில் கையெழுத்திட்டனர்.

கடந்த 21ஆம் தேதி பெல்ஜியம் நாட்டிலிருந்து 321,390 பைசர் பயோஎன்டெக் தடுப்பூசிகள் கோலாலம்பூர் வந்தடைந்தன. அவற்றில் 78.000 தடுப்பூசிகள் சிலாங்கூருக்கு வழங்கப்பட்டன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.