NATIONAL

சிலாங்கூரில் கோவிட்-19 ஆகக்கடைசி நிலவரங்கள்

30 ஜனவரி 2021, 6:34 AM
சிலாங்கூரில் கோவிட்-19 ஆகக்கடைசி நிலவரங்கள்

ஷா ஆலம், ஜன 30:-சிலாங்கூரில்  கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் தான் நேற்று இரவு (29 ஜனவரி 2021) மாநில பாதுகாப்பு மன்றக் கூட்டத்தை கூட்டியதாகவும்,  சிலாங்கூரில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை குறித்து குறிப்பாக,  நேற்று மாலை சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு மற்றும் இந்நோய்த் தொற்றின் சங்கிலித் தொடர்பை துண்டிப்பது பற்றி விவாதிப்பதற்காக அந்த கூட்டம் நடத்தப்பட்டது என மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அமிடின் ஷாரி சிலாங்கூர் மந்திரி புசார் கூறினார்.

இதன் தொடர்பில் விளக்கமளித்த சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை, நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு பல அம்சங்கள் முக்கிய காரணமாக விளங்குவதாக தெரிவித்தது. நேரடியாகவும் உடனடியாகவும் தெரிவிக்கப்படாத தொழிற்சாலை ஊழியர்கள், சிறைச்சாலைகள், கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்ட பழைய பின் சேர்ப்பு சம்பவங்களும் இதில் அடங்கும் என்றும் 10 நாட்களுக்கு முன் நடந்த சம்பவங்களின் வாயிலாகத் தான் இந்த பின் சேர்ப்பு சம்பவங்களை அடையாளம் காண முடியும் என்றும் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.