NATIONAL

சிலாங்கூர் கெர்ஜாயா விவேக சுயவிபர முறை வேலைக்கான தேர்வு பணியை எளிதாக்க உதவும்

29 ஜனவரி 2021, 3:15 PM
சிலாங்கூர் கெர்ஜாயா விவேக சுயவிபர முறை வேலைக்கான தேர்வு பணியை எளிதாக்க உதவும்

ஷா ஆலம், ஜன 29- சிலாங்கூர் கெர்ஜாயா விவேக சுயவிபர முறையின் வாயிலாக விண்ணப்பதாரரின் தகுதிக் குறிப்புக்கும் காலியாக உள்ள வேலைக்கும் உள்ள பொருத்தத்தை உறுதி செய்ய முடியும்.

முதலாளியின் எதிர்பார்ப்புக்கேற்ப விண்ணப்பதாரரின் தகுதிகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய இந்த விவேக சுயவிபர முறை உதவும் என்று மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது தவிர்த்து வேலை தேடுவோரின் ஆற்றலைப் பெருக்குவதற்கு ஏதுவாக அவர்களின் திறனை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளும் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இதன் வாயிலாக ஊழியர்கள் திறன்பெற்றவர்களாகவும் தொடர்ந்து ஒரே இடத்தில் நிலைத்து வேலை  செய்யக்கூடியவர்களாகவும் விளங்குவதை உறுதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

வேலை தேடுவோர்  எனும் அகப்பக்கம் வாயிலாக விரைந்து விண்ணப்பம் செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் திட்டங்களில் ஒன்றாக சிலாங்கூர் கெர்ஜாயா விளங்குகிறது. இது வேலை வாய்ப்பைத் தேடித் தரும் மற்ற தளங்களைக் காட்டிலும்  தனித்துவமான அம்சங்களைக்  கொண்டுள்ளது.

 

 

 

 

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.