ஷா ஆலம், ஜன 27- கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 96 தனியார் மருத்துவமனைகள் இணக்கம் தெரிவித்துள்ளன.இதன் வழி கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக 1,252 கட்டில்களும் தீவிர சிகிச்சை பிரிவில் 65 கட்டில்களும் 54 வெண்டிலேட்டர் சாதனங்களும் கிடைக்கும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை கட்டணத்தை தீர்மானிக்க நிதியமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் காப்புறுதி நிறுவனங்களுக்கிடையே தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.
இதனிடையே, நோய்த் தொற்றைக் கண்டறியும் சோதனைகளை விரிவான அளவில் மேற்கொள்ளவதற்காக அரசு துறைகள் மற்றும் அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் உள்ள ஆய்வக வசதிகளை அரசாங்கம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பொருத்தமான அரசாங்க கட்டிடங்கள் கோவிட்-19 நோய் பரிசோதனை செய்யும் மையங்களாக மாற்றப்படவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
NATIONAL
கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 96 தனியார் மருத்துவமனைகள் இணக்கம்
27 ஜனவரி 2021, 4:17 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



