ஷா ஆலம், ஜன 26- நாட்டில் இன்று 3585 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று பதிவான 3048 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது உயர்ந்துள்ளது. புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186,849 ஆக அதிகரித்துள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து 4076 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன் வழி இந்நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 149160 ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்று இன்னும் தீவிரத் தன்மையும் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40574 ஆகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினர். புதிதாக இன்று 11 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட வேளையில் இந்நோய் தொற்றினால் ஏற்பட்ட மொத்த மரண எண்ணிக்கை 700 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் சொன்னார். தீவிர சிகிச்சை பிரிவில் 280 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 111 பேருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
NATIONAL
கோவிட்-19; இன்று புதிதாக 3,585 பேருக்கு நோய்த் தொற்று- 4076 பேர் குணமடைந்தனர்
26 ஜனவரி 2021, 12:17 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



