ACTIVITIES AND ADS

சிலாங்கூர் அரசின் உதவித் திட்டம்- மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்திற்கு சிறந்த முன்னுதாரணம்- அன்வார் வர்ணனை

20 ஜனவரி 2021, 12:25 PM
சிலாங்கூர் அரசின் உதவித் திட்டம்- மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்திற்கு சிறந்த முன்னுதாரணம்- அன்வார் வர்ணனை

ஷா ஆலம், ஜன 20-  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அறிவித்த நமது சிலாங்கூர் உதவித் திட்டம் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்திற்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்குவதாக எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார்.

மந்திரி புசார் அறிவித்துள்ள இந்த உதவித்  திட்டம் முன்களப் பணியாளர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

பல கூடுதல் உதவித் திட்டங்களை உள்ளடக்கிய மந்திரி புசாரின் அறிவிப்பால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். விரிவான திட்டங்களை உள்ளடக்கிய சிறந்த முன்னுதாரண நடவடிக்கையாக இது அமைகிறது என்றார் அவர்.

முன்களப் பணியாளர்களுக்கு உணவு உதவித் திட்டத்தை சிலாங்கூர் அரசு அமல்படுத்துகிறது. மக்களுக்கு உணவுப் பொருள் அடங்கிய கூடைகளை வழங்குகிறது. யாயாசான் சிலாங்கூர் கல்விக் கடனை ரத்து செய்கிறது. இது மட்டுமல்ல இன்னும் ஏராளமான திட்டங்களை அது அமல்படுத்துகிறது என அவர் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு 7 கோடியே 38 லட்சத்து 77ஆயிரம் வெள்ளி மதிப்பிலான நமது சிலாங்கூர் உதவித் திட்டத்தை இன்று அறிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.