ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் இன்று இடியுடன் கூடிய அடை மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

14 ஜனவரி 2021, 4:16 AM
சிலாங்கூரில் இன்று இடியுடன் கூடிய அடை மழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

ஷா ஆலம், ஜன 14- சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான், கோல சிலாங்கூர், கோல லங்காட் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மற்றும் புயலுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதே போன்ற மோசமான வானிலை சரவா மாநிலத்தின் மிரி மற்றும் லிம்பாங் ஆகிய பகுதிகளிலும் காணப்படும் என்றும் அது கூறியது.

சவா மாநிலத்தின் சிபித்தாங், தெனோம், கோலபென்யூ, பியூஃபோர்ட் ஆகிய பகுதிகளிலும் இடி மற்றும் புயலுடன் கூடிய அடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.