ஷா ஆலம், டிச 28- இம்மாதம் இறுதியுடன் முடிவுக்கு வருவதாக இருந்த நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இம்மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அபரிமித உயர்வைக் கண்டதைத் தொடர்ந்து பொது முடக்கத்தை நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
கோலாலம்பூர் மற்றும் சபாவிலும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
முன்பு சபாக் பெர்ணம் மாவட்டம் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. அம்மாவட்டமும் இப்போது சிவப்பு மண்டலமாக மாறிவிட்டது. ஆகையால் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நிபந்தனையுடன் கூடிய பொது முடக்கத்தை அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் அதிகரிப்பு காரணமாக சிலாங்கூர் மாநிலம் முழுவதும் சிவப்பு மண்டலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
NATIONAL
சிலாங்கூரில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜனவரி 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு
28 டிசம்பர் 2020, 1:02 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

national
நிறுவன ஆலோசகராக கணவர் நியமனம்- பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக மனைவி மீது குற்றச்சாட்டு
Shalini Rajamogun
31 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




