GALERI

புதிய பாணியில் தீபாவளி உபசரிப்பை நடத்தினார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்

30 நவம்பர் 2020, 5:04 AM
புதிய பாணியில் தீபாவளி உபசரிப்பை நடத்தினார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்

கிள்ளான், நவ 30- கோவிட்-19 பெருந் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் புதிய பாணியில் தீபாவளி பொது உபசரிப்பை நடத்தினார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ்.

பொது மக்கள் வாகனங்களில் இருந்தவாறே உணவுப் பொட்டலங்களை பெற்றுச் செல்லும் வகையில் இந்த பொது உச்சரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த உபசரிப்பில் சுமார் ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்களும் குளிர் பானங்களும் வழங்கப் பட்டதாக குணராஜ் சொன்னார்.

நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிற்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கேற்ப இந்த தீபாவளி பொது உபசரிப்பு நடத்தப்பட்டது என்றார் அவர்.

மலாய்க்காரர் மற்றும் சீனர்களும் கலந்து கொண்டது இந்நிகழ்வுக்கு பெருமையளிக்கும் விதமாக அமைந்தது. இது இன நல்லிணக்கத்தையும் புலப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த தொகுதியில் உள்ள ஐந்து மண்டலங்களை உள்ளடக்கிய தீபாவளி கூடாரங்களை அழகு படுத்தும் போட்டி நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.