NATIONAL

ஷா ஆலம் யு.டி.சி. வருமான வரி அலுலகம் 27ஆம் தேதி வரை மூடப்படும்

24 அக்டோபர் 2020, 10:53 AM
ஷா ஆலம் யு.டி.சி. வருமான வரி அலுலகம் 27ஆம் தேதி வரை மூடப்படும்

கோலாலம்பூர், அக் 24- ஷா ஆலமில் உள்ள யு.டி.சி. எனப்படும் நகர உருமாற்று மையத்தில் செயல்படும் உள்நாட்டு வருமான வரி வாரிய அலுவலகம் இம்மாதம் 27 ஆம் தேதி வரை மூடப்படும்.

அந்த அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உள்நாட்டு வருமான வரி வாரியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் இணையம் வாயிலாக தங்கள் வருமான வரியைச் செலுத்தலாம் என்று அந்த வாரியம் கூறியது. மேல் விபரங்கள் அறிய விரும்புவோர் 03-89111000 என்ற எண்களில் அல்லது உள்நாட்டு வருமான வரி வாரிய அகப்பக்கம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.